நேபாள பிரதிநிதிகள் சபை
நேபாள பிரதிநிதிகள் சபை (கீழவை) प्रतिनिधि सभा | |
---|---|
வகை | |
வகை | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 275 |
அரசியல் குழுக்கள் | மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் நேபாளி காங்கிரஸ் மாவோயிஸ்ட் ராஷ்டிரிய ஜனதா கட்சி நேபாள சோசலிச கூட்டமைப்பு கட்சி |
தேர்தல்கள் | |
நேரடியாக | |
அண்மைய தேர்தல் | நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017 |
அடுத்த தேர்தல் | 2022 |
கூடும் இடம் | |
மன்னர் வீரேந்திரே பன்னாட்டு மாநாட்டு மையம் |
பிரதிநிதிகள் சபை (House of Representatives) (प्रतिनिधि सभा), நேபாள நாடாளுமன்றம் ஈரவை முறைமை கொண்டது. மேலவையை தேசிய சட்டமன்றம் என்றும், கீழவையை நேபாள பிரதிநிதிகள் சபை என்றும் அழைப்பர்.
நேபாள நாடாளுமன்றத்திற்கான ஈரவை முறைமை, அரசியல் அமைப்புச் சட்டத்தின், பகுதி 8 மற்றும் 9ல் கூறியவாறு நிறுவப்பட்டது. [1]
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்வு முறை
[தொகு]நேபாள நாடாளுமன்றம் மொத்தம் 334 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் பிரதிநிதிகள் சபை (கீழவை) 275 உறுப்பினர்களைக் கொண்டது. தேசிய சட்டமன்றம் (மேலவை) 59 உறுப்பினர்களைக் கொண்டது.
நேபாள நாடாளுமன்றத் தேர்தல் முறையில், பிரதிநிதிகள் சபையின் 165 உறுப்பினர்களை, வாக்காளர்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கலாம்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில், நாடு முழுவதும் பதிவான மொத்த வாக்குகளில், மூன்று சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்கு சதவீதம் (%) பெற்ற அரசியல் கட்சிகளின் 110 உறுப்பினர்கள் நேபாள பிரதிநிதிகள் சபைக்கு மறைமுகமாகத் தேர்வு செய்யப்படுவர். [2]
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டாகும்.
நேபாளப் பிரதமர், பெரும்பான்மையான பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களால் தேர்ந்தேடுக்கப்படுகிறார்.
பிரதிநிதிகள் சபை தேர்தல் 2017
[தொகு]ஐந்தாண்டு பதவிக்கால நேபாளத்தின் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 275 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 அன்று இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றது. [3] [4]
பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவுகள்
[தொகு]நேபாளத்தின் புதிய 2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளவாறு, பிரதிநிதிகள் சபைத் தேர்தலில், மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் ஓன்றியம், நேபாளி காங்கிரஸ், மாவோயிஸ்ட், ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி, சோசலிச கூட்டமைப்பு கட்சி என ஐந்து அரசியல் கட்சிகள் மட்டுமே, பதிவான வாக்குகளில் மூன்று மட்டும் அதற்கு அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதால், அக்கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகளுக்கு ஏற்றவாறு இடங்கள் ஒதுக்கபப்ட்டுள்ளது.
275 இடங்கள் கொண்ட நேபாள பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் 10,587,521 (68.63%) வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளில் மூன்று சதவீத விகிதாசார வாக்குகள் பெறாத காரணத்தினால், ராஷ்டிரிய பிரஜா தந்திர ஜனநாயக கட்சி, புதிய சக்தி கட்சி, ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா கட்சி மற்றும் நேபாள தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநித்துவ இடங்கள் ஒதுக்கப்படவில்லை.
மேலும் மூன்று சதவீத (%) வாக்குகள் பெறாத அரசியல் கட்சிகளின் நேரடித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை, நேபாள பிரதிநிதிகள் சபையில் சுயேட்சை உறுப்பினர்களுக்கான தகுதி வழங்கப்படும்.
அரசியல் கட்சி | சின்னம் | நேரடி தேர்தலில் | விகிதாசாரத்தில் | மொத்த இடங்கள் | ||||
---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | |||
மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் (சிவப்பு நிறப்புள்ளிகள்) | 80 | 3,173,494 | 33.25 | 41 | 121 | |||
நேபாளி காங்கிரஸ் (பச்சை நிறப்புள்ளிகள்) | 23 | 3,128,389 | 32.78 | 40 | 63 | |||
மாவோயிஸ்ட் (மெருன் நிறப்புள்ளிகள்) | 36 | 1,303,721 | 13.66 | 17 | 53 | |||
இராஷ்டிரிய ஜனதா கட்சி (பிங்க் நிறப்புள்ளிகள்) | 11 | 472,254 | 4.95 | 6 | 17 | |||
பெடரல் சோசலிஸ்ட் கட்சி (காவி நிறப்புள்ளிகள்) | 10 | 470,201 | 4.93 | 6 | 16 | |||
ராஷ்டிரிய பிரஜா தந்திர ஜனநாயகக் கட்சி | 1 | 196,782 | 2.06 | 0 | 1 | |||
புதிய சக்தி கட்சி | 1 | 81,837 | 0.86 | 0 | 1 | |||
ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா கட்சி | 1 | 62,133 | 0.65 | 0 | 1 | |||
தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி | 1 | 56,141 | 0.59 | 0 | 1 | |||
சுயேட்சை | 1 | 0 | 1 | |||||
மொத்தம் | 165 | 110 | 275[5] |
பிரதிநிதிகள் சபை கலைப்பு, வழக்கு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு
[தொகு]நேபாளத்தை ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குள் சர்ச்சைகள் நீடித்ததால், நேபாள பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒளி 22 டிசம்பர் 2020 அன்று நேபாள பிரதிநிதிகள் சபையை கலைத்தார். இச்செயலுக்கு நேபாளக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுத்தார்.[6]பிரதமரின் செயலை எதிர்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 23 பிப்ரவரி 2021 அன்று உச்ச நீதிமன்றம் பிரதமருக்கு பிரதிநிதிகள் சபை கலைக்கும் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. எனவே 10 மே 2021 அன்று பிரதமர் சர்மா ஒளி, நேபாள பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பிரதமர் ஒளிக்கு ஆதரவாக 93 பிரதிநிதிகளும், எதிராக 124 பிரதிநிதிகளும் வாக்களித்தனர். எனவே நேபாள பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மையினர் நம்பிக்கை இழந்த சர்மா ஒளி பிரதமர் பதவிலியிலிருந்து எதிராக விலகினார்.[7][8]
இதனையும் காண்க
[தொகு]- நேபாள தேசிய சபை
- நேபாள நாடாளுமன்றம்
- நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017
- நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017
- நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017
- நேபாள தேசிய சட்டமன்றம் (மேலவை)
- நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015
- கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம், நேபாளம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Article 86 (2) Constitution of Nepal
- ↑ Article 86 (2) Constitution of Nepal
- ↑ "Govt decides to hold provincial, parliamentary polls in two phases". The Himalayan Times. International Media Network Nepal (Pvt) Ltd. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.
- ↑ Nepal Elections 2017
- ↑ EC makes public federal parliament PR results
- ↑ Nepal in turmoil: On dissolution of Parliament by K.P. Sharma Oli
- ↑ Nepal in turmoil: On dissolution of Parliament by K.P. Sharma Oli
- ↑ Nepal Supreme Court overturns Prime Minister KP Sharma Oli’s decision to dissolve House